இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்… சச்சின் கருத்து!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (18:47 IST)
இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தோல்வி குறித்து சச்சின் பேசியுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. மழையால் இரண்டு நாள் ஆட்டம் பாதிக்கப்பட்ட போதும் நியுசி அணி சிறப்பாக விளையாடி ஆட்டத்தைக் கைப்பற்றியது. மிக முக்கியமாக கடைசிநாளில் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் நியுசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு என்னக் காரணம் என்பது குறித்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அதில் ‘கடைசி நாளில் இந்தியா கோலி மற்றும் புஜாரா ஆகியவர்களை 10 பந்துகள் இடைவெளியில் இழந்ததே காரணம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்