என்னை முதலில் நிராகரித்தனர் – சச்சினின் வாழ்க்கையை மாற்றிய கதை !

Webdunia
சனி, 26 அக்டோபர் 2019 (09:05 IST)
கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன்னை முதலில் அணியில் தேர்வு செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் 25 ஆண்டுகாலமாக கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாக வழிபட்டு வந்தவர். அவர் தொட்டதெல்லாம் சாதனையாக மாறியது. ஆனால் அவரது தொடக்கம் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை என அவரேக் கூறியுள்ளார்.

’முதன் முதலாக நான் அணித்தேர்வுக்கு சென்றபோது என்னை நிராகரித்து விட்டனர். நான் இன்னும் கடினமாக உழைத்து என் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றனர். அப்போது எனக்கு அது ஏமாற்றமளித்தது. நான் சிறப்பாக விளையாடுவதாக அப்போது நினைத்தேன். அதன் பிறகுதான் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உறுதி என்னில் ஏற்பட்டது. நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமெனில் குறுக்கு வழிகள் ஒருபோதும் பயனளிக்காது. என் வளர்ச்சியில் என் குடும்பத்தினருக்கு அதிக பங்கு உண்டு, என் மூத்த சகோதரி  எனது முதல் கிரிக்கெட் மட்டையைப் பரிசாக அளித்தார். ‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்