தோனிதான் வேண்டும்; சைகை காட்டிய ரோகித்: வைரல் வீடியோ!!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (16:09 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விஸ்வரூபத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. 
 
ரோகித் ஆவுட்டானதும், 3 வது வீரர்காக தோனி களம் இறக்கப்பட்டது வியப்படைய செய்தது. தோனியும் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியை 3 வது வீரராக களமிறப்பட்டதற்கான காரணம் ரோகித் சர்மா என தெரியவந்துள்ளது.
 
ஆம், தோனியை 3 வது வீரராக களம் இறக்குமாறு கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு மைதானத்தில் சைகை மூலமாக தெரிவித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
சமீபத்தில் ரோகித சர்மா, தோனிக்கு 4 வது இடமே அனியில் சரியானது எனவும், தோனி இனி போட்டிகளில் சுதந்திரமாக விளையாட வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்