பஞ்சாப் அணியை வீழ்த்தியது தமிழ்நாடு: 7 ஆண்டுக்கு பின் ரஞ்சித் கோப்பை காலிறுதிக்கு தகுதி..!

Mahendran
திங்கள், 19 பிப்ரவரி 2024 (18:33 IST)
ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து காலிறுதிக்கு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றுள்ள தமிழ்நாடு அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
கடந்த 16ஆம் தேதி பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கிய நிலையில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 274 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆகியதை அடுத்து மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்தது. 
 
இதனால் தமிழ்நாடு அணி இந்த போட்டியில் வெற்றி பெற 71 ரன்கள் இலக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து தமிழ்நாடு அணி காலுறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்