கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்.. 13 பேர் கைது..33 டிக்கெட்டுகள் பறிமுதல்..!

Siva

வெள்ளி, 3 மே 2024 (06:35 IST)
ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் 50 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த தொடர் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் ஒவ்வொரு முறை ஐபிஎல் போட்டி நடைபெறும் போதும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது என்பதும் மொத்தமாக ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய சிலர் அதிக விலைக்கு டிக்கெட் விலை விற்பனை செய்து வருவதாக கூறப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே காவல்துறை எச்சரித்து இருந்த நிலையில் நேற்று கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 13 பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 33 டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை  செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை எடுத்து அதிரடியாக சோதனை செய்ததில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இனிமேல் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்