தேங்யூ அண்ட் ஐ எம் சாரி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜோகோவிச் வருத்தம்!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (11:57 IST)
நோவக் ஜோகோவிச் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் விளையாடிய நோவக் ஜோகோவிச் பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்றதால் 5-6 என பின் தங்கியிருந்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடித்தார். அந்த பந்து அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரை தாக்கியதால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோகோவிச் உடனே பெண் நடுவருக்கு உதவி செய்து அவரிடம் மன்னிப்பும் கோரினார். இதனையடுத்து யுஎஸ் ஓபன் தொடர் நடுவர் ஆரிலி டூர்ட்டி இதுகுறித்து ஆலோசனை செய்து ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் நோவக் ஜோகோவிச் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், நடந்த சம்பவத்தால் நான் சோகமாகவும் வெறுமையாகவும் உணர்கிறேன். பந்தை நான் எதேச்சையாக அடித்தேன். அது லைனில் நின்றுக்கொண்டிருந்த பெண் நடுவர் மீது பட்டௌடன் ஓடி சென்று பார்த்தேன், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிந்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னேன். 
 
அவருக்கு உடல் ரீதியாக வலி கொடுத்ததற்கு வருந்துகின்றேன். இந்த தகுதி நீக்க நடவடிக்கை என்னை ஒரு மனிதனாகவும் வீரர்களும் பக்குவப்படுத்திக்கொள்ளவதற்கான வாய்ப்பாக பார்க்கிறேன். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி. தேங்யூ அண்ட் ஐ எம் சாரி என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்