என்னைக்குமே நியுசிலாந்து இதுல டாப்புதான் ! ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் !

வியாழன், 30 ஜனவரி 2020 (15:59 IST)
நியுசிலாந்து வீரர்கள் காயம்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரரைத் தூக்கிச்செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நியுசிலாந்து வீரர்கள் களத்தில் எத்தகைய சூழ்நிலை வந்தாலும் தங்களைக் கட்டுக்குள் வைத்து ஜெண்டில்மேனாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள். இதற்கு சமீபத்திய உதாரணமாக நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் உள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோசமான முறைகளால் கோப்பை அவர்களை விட்டு சென்ற போதும் அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார்.

அதேப்போலவே நியுசிலாந்து வீரர்களின் பெருந்தனமையைக் காட்டும் விதமாக மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. நியுசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது. அப்போட்டியில் சதைப்பிடிப்பால் அவதிப்பட்ட மே.இ.தீவுகள் வீரரான மெக்கன்சி களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அவரால் சுத்தமாக நடக்க முடியவில்லை.

அவரை எடுத்து செல்வதற்கு தேவையான ஸ்ட்ரெச்சரும் இல்லாததால், நியுசிலாந்து வீரர்கள் ஜெஸி டேஷ்காஃப் மற்றும் ஜோசப் பீல்டும்  பெவிலியன் வரை தூக்கிச் சென்று அனைவரையும் நெகிழவைத்தனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்