விஜய் ஹசாரே தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டார் நடராஜன்: என்ன காரணம்?

வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:36 IST)
விரைவில் நடைபெற இருக்கும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தமிழக அணியில் நடராஜன் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து அவர் விடுவிக்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்ததே காரணம் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் நடராஜனை சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஏற்று விஜய் ஹசாரே தொடரிலிருந்து நடராஜனை தமிழக கிரிக்கெட் சங்கம் விடுவித்தது.
 
எனவே இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் விளையாடிய நடராஜன் அதேபோல் இந்தியாவில் நடைபெறும் தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்