ஐபிஎல் இறுதிப்போட்டி: மும்பை தடுமாற்றம்

ஞாயிறு, 21 மே 2017 (20:47 IST)
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி நாள் இன்று. ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2017 இறுதி போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் ஆட்டத்தின் முதல் ஓவரில் பார்த்தீவ் பட்டேல் 4 ரன்களிலும், இரண்டாவது ஓவரில் சிம்மன்ஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 8வது ஓவரில் மும்பையின் நம்பிக்கை நட்சத்திரமான ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.


 


இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 22 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் பாண்டியா 5 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கின்றார். மும்பை அணி 8வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் என்ற நிலையில் உள்ளது.

புனே அணியில் உனாகட் மிக அற்புதமாக 2 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் கேப்டன் ஸ்மித் மிக அபாரமாக ஒரு ரன் அவுட் ஆக்கியுள்ளார். இன்றைய போட்டியில் புனே வெற்றி பெற்றால் அந்த அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்