ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இடையே நடந்த காரசாரமான உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
"நான் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால், கோயங்காவை உடனடியாக தடை செய்து, அவரது அணி உரிமையை திரும்ப பெற்றிருப்பேன்" என்று லலித் மோடி ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், லக்னோ நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளதுடன், பண்ட் மீதான தனது நம்பிக்கையை கோயங்கா உறுதிப்படுத்தியுள்ளார். கேமராக்களில் தெரிவது முழுமையான உண்மை அல்ல என்றும், அணிக்குள் இணக்கமான சூழலே நிலவுவதாகவும் லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.