இப்படி விளையாடுனா எப்படி ஜெய்போம்: கோலி கடுப்பு!!

ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (15:49 IST)
ஐந்து கேட்ச் மற்றும் 11 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தால் தோற்காமல் என்ன செய்ய முடியும் என கேப்டன் விராட் கோலி விரத்தியில் தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் நடந்தது. 
 
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 105 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் எடுத்து 441 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
 
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி, ஸ்டீவ் ஓ கெபி சுழலில் சின்னா பின்னமாக, இரண்டாவது இன்னிங்சிலும் 107 ரன்களுக்கு சுருண்டது. 
 
இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை மிஞ்சிவிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் இது தான். ஒரு டெஸ்டில் ஐந்து கேட்சை தவறவிடுவது, பின் 11 ரன்களுக்குள் 7 விக்கெட்டை பறிகொடுப்பது என்று வரிசையாக இருந்தால் எப்படி ஜெயிப்பது என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்