சானியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை

புதன், 26 ஆகஸ்ட் 2015 (17:56 IST)
கேல் ரத்னா விருது சானியாவுக்கு வழங்க மாற்றுத்திறனாளி வீரர் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சானியா மிர்சாவை விட கேல் ரத்னா விருதுக்கு தாம் தகுதியானவர் என்று பாரம்லிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தடகள வீரர் கிரிஷா நாகராஜ கவுடா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும்  வழக்கு விசாரணை முடிவடையும் வரை சானியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள கிரிஷா நாகராஜ கவுடா பெங்களூருவை சேர்ந்தவர். 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்