இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது ஜெயவர்தனே, சங்கக்காரா சாடல்!

புதன், 9 ஏப்ரல் 2014 (13:11 IST)
T20 உலக சாம்பியன்களான இலங்கை அணியின் இரண்டு பிரதான வீரர்கள் ஜெயவர்தனே, மற்றும் சங்கக்காரா ஓய்வு பெறும் அறிவிப்பில் சொதப்பிய இலங்கை கிரிக்கெட் வாரிய செயலர் நிஷந்தா ரணதுங்கா மீது இரு வீரர்களும் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருவரது ஓய்வு அறிவிப்பு அணித் தேர்வாளர் சனத் ஜெயசூரியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து அவர் வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
 
சங்கக்காரா செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில் தான் ஓய்வுபெறப்போவதை அறிவிக்க ஜெயவர்தனேயோ ஐசிசி டுவிட்டர் மிரர் கேம்பெயினில் இதனை அறிவித்தார்.
 
இது குறித்து கொழும்புவில் கோப்பையுடன் இறங்கியவுடனேயே ஜெயவர்தனே காட்டம் காட்டியுள்ளார்:

"நாங்கள் ஊடகங்களுக்கு என்ன கூறினோம் என்பதை எங்களைக் கேட்காமலேயெ வாரியச் செயலர் வெளிப்படுத்திவிட்டார். அதுவும் அந்த மீடியாவைத் தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்துள்ளார். அவர் பொறுப்புள்ளவராக இருந்திருந்தால் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லி. நாங்கள் என்ன அறிவித்தோம் என்பதை எங்களிடம்தான் அவர் கேட்டிருக்கவேண்டும்" என்றார் ஜெயவர்தனே.
சங்கக்காரா, ஜெயவர்தனே இருவரும் ஜெயசூரியாவிடம் இது குறித்து நீண்ட நேரம் பேசி கருத்து வேறுபாடுகளை சரி செய்து கொண்டுள்ளனர்.
 
எங்களுடைய கடைசி T20 உலகக் கோப்பை இதுதான் என்று கூறினோமே தவிர T20-யிலிருந்து ஓய்வு பெறுகிறோம் என்று கூறவில்லை. ஆனால் இப்போது தேர்வாளரிடம் ஓய்வு பற்றி தெரிவித்து விட்டோம்.
 
என்று கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்