ஐசிசி தலைவராகிறாரா ஜெய்ஷா? ஆகஸ்ட் 27 வரை வேட்புமனு தாக்கல்..!

Mahendran

புதன், 21 ஆகஸ்ட் 2024 (11:34 IST)
ஐசிசி தலைவர் பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் வேட்பு  மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லோர் கண்களும் ஜெய்ஷாவை நோக்கி உள்ளதாகவும் அவர் ஐசிசி தலைவராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று கூறப்படும் ஐசிசி தலைவராக தற்போது கிரேக் பார்க்லே என்பவர் இருந்து வரும் நிலையில் அவரது பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அவர் மீண்டும் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளதை அடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐசிசி தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுடையவர்கள் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்படும் ஐசிசி தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் இருக்கும் என்றும் வரும் டிசம்பர் முதல் புதிய ஐசிசி தலைவரின் பணி ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

 ஒருவேளை ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டால் 35 வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெருமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் சீனிவாசன், மனோகர் உள்ளிட்டோர் இந்தியாவில் இருந்து ஐசிசி தலைவராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்