கடைசி பந்து வரை திக் திக்… பினிஷர் என நிரூபித்த தோனி – ஜடஜா செய்த மரியாதை!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:50 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், வர்மா 51 ரன்களும்,  ஷோகீன் 25 வ், பொல்லார்ட் 14 வ, உங்கட் 19 ரன்ளும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி  7  விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய விக்கெட்கள் விழ தோனி மட்டும் நிலைத்து நின்றார். கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. அதன் பின்னர் அதிரடியில் புகுந்தனர் தோனியும் பிரிட்டோரியஸும். கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற போது தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று தந்தார்.

இதையடுத்து சென்னை அணியின் கேப்டனான ஜடேஜா மைதானத்துக்கு வந்த போது தன்னுடைய தொப்பியை கழட்டி தோனி முன்னர் தலைசாய்த்து அவருக்கு மரியாதையை செலுத்தினார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்