சிறந்த ஆல்ரவுண்டர்: நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ஜடேஜா

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (06:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் ஜடேஜா கடந்த சில மாதங்களாக நல்ல முறையில் விளையாடி வரும் நிலையில் சிறந்த ஆல்ரவுண்டருக்கான ஐசிசி ரேங்கிங் பட்டியலில் 438 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஏற்கனவே நம்பர் ஒன் இடத்தில் இருந்த அஸ்வினை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 
 
சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியல்: 
 
1. ஜடேஜா  இந்தியா புள்ளிகள்: 438
2. ஷாகிப் அல் ஹசன் வங்க தேசம் புள்ளிகள்: 431
3. அஸ்வின் இந்தியா புள்ளிகள்: 418
4. மொயின் அலி இங்கிலாந்து புள்ளிகள்: 409
5. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புள்ளிகள்: 360
6. வெமன் ஃபிலாண்டர் தென்னாப்பிரிக்கா புள்ளிகள்: 331
7.ஸ்டார்க் ஆஸ்திரேலியா புள்ளிகள்: 318
8. ஜாசன் ஹொல்டர் மேற்கிந்திய தீவுகள் புள்ளிகள்: 217
9. பெராரே இலங்கை புள்ளிகள்: 211
10. ஹெராத் இலங்கை புள்ளிகள்: 207
 
மேலும் ஆல்ரவுண்டரில் மட்டுமின்றி ஐசிசி பந்துவீச்சு ரேங்கிங்கிலும் ஜடேஜா முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் ஆஸ்திரேலியாவின் ஸ்டேவ் ஸ்மித் முதலிடத்திலும் விராத் கோஹ்லி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 
அடுத்த கட்டுரையில்