இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று இரவு நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமின் அணியான நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், சச்சினின் கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.
மேலும் கேரள வீரர் வாட், 72 வது நிமிடத்தில் தனது 3வது கோலை பதிவு செய்தார். 82 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் வெல்லீஷ் கோல் அடித்து அணிக்கான ஆறுதல் கோலை பதிவு செய்தார்.ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.