ஐபிஎல்-2023: ரஹானே அதிரடியில் சென்னை அணி வெற்றி!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (09:33 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல்-16 வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நேற்றைய 12 வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது.

டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.  எனவே மும்பை அணி பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியில் ரோஹித் சர்மா 21 ரன்னும், கிஷன் 31 ரன்னும், கேமரூன்12 ரன்னும், டேவிட் 31 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், 8விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 157 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார், தேஷ்பாண்டே 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, பேட்டிங் செய்த சென்னை அணியில், ரஹானே 19 பந்துகளில் அரைசத அடித்து, 21 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். துபே 28 ரன்னும் அடித்தனர். எனவே ரஹானே அதிரடியில் சென்னை கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்