சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

சனி, 5 நவம்பர் 2016 (19:01 IST)
சீனவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.


 

 
பெண்களுக்கான 4வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைப்பெற்று வந்தது. இதன் லீக் போட்டிகள் முடிவில் சீனா புள்ளி பட்டியலில் முதலிடமும், இந்தியா இரண்டாவது இடமும் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
 
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதன்மூலம் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்