இந்திய பயிற்சியாளர் பதவிக்கு வருகிற 7 ஆம் தேதி நேர்காணல்!!

செவ்வாய், 6 ஜூன் 2017 (17:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு முடிகிறது.




 
 
விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுவாடு நிலவுவதாகவும், இதனால் தான் கும்ப்ளேவின் பதவி காலத்தை நீட்டிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியானது.
 
இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், லால்சந்த், ராஜ்புட், தோடா கணேஷ், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ் ஆகிய 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 
புதிய பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் வருகிற 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. நேர்காணலை தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோரை கொண்ட குழு நடத்துகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்