எல்லா ஏரியாவிலும் நம்பர் 1: கெத்து காட்டும் இந்தியா

புதன், 14 பிப்ரவரி 2018 (16:57 IST)
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
 
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 ஒருநாள் கொணட போட்டி தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.
 
இதன்மூலம் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடதிற்கு முன்னேறியது. அதனால் தென்னாப்பிரிக்கா அணி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்திய அணி தோற்றாலும் முதலிடத்திற்கு பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்