தடுமாறும் இந்தியா: 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள்...

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (19:34 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் டி20 போட்டி கவுஹாத்தியில் துவங்கியது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.  


 
 
இரண்டாம் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபில்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்த களமிறங்கிய இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
 
தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறது இந்திய அணி. முதல் நான்கு ஓவர்கள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோகித் சர்மா, தவான் மற்றும் பாண்டே ஒன்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர்.
 
இந்திய அணியின் கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினார். தற்போது தோனி மற்றும் கேதர் ஜாதவ் களத்தில் உள்ளனர்.
 
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்