இரண்டாவது இன்னிங்ஸில் அசத்திய இந்தியா; அதிர்ந்த இலங்கை

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (18:21 IST)
இந்தியா - இலங்கை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆட்டம் கண்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அசத்திவிட்டது.


 

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
முதல் இன்னிங்ஸில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணியை இலங்கை அதிரவைத்தது. 172 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 294 எடுத்து ஆல் அவுட் ஆனது.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இலங்கை அணிக்கு ஷாக் கொடுத்தது. நான்காவது நாளான இன்று இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி தற்போது இலங்கையை விட 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் தவான் நிலைநின்று இந்திய அணியை முன்னேற்றினர். தவான் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ராகுல் 73 ரன்களுடனும் புஜாரா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டி பெரும்பாலும் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்