சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மற்றும் இந்தியாவின் நட்சத்திர வீரங்கனை மிதாலி ராஜ் ஆகியோருக்கு இடையில் பிரச்சனை உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடரில் நல்ல ஆட்டத்திறனில் இருந்த மிதாலி ராஜை திடிரென அணியில் இருந்து ஓரங்கட்டினர். இதனால் இந்திய அணி அரையிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து மிதாலி ராஜ் கேப்டன், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது புகார் கூறினார்.
அதில் ‘கடந்த சில மாதங்களாக இந்திய அணி சிறந்த அணிகளோடு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதியில் நாம் தோற்றது மிகவும் சோகமான நிகழ்வாகும். மிதாலியை அணியில் சேர்க்காதது ஒட்டுமொத்த அணி நிர்வாகத்தின் முடிவு. ரமேஷ் பவார் வெறும் பயிற்சியாளராக மட்டுமல்லாமல் எங்களைப் பல விதங்களில் ஊக்குவித்துள்ளார். உலகக்கோப்பை டி 20 போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வருடமே உள்ளதால் அவரே தொடர்ந்து பயிற்சியாளராக தொடர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்’ என எழுதியுள்ளார்.