தோனி மட்டும் தனியாக விளையாடி உலகக்கோப்பைகளை வென்றாரா? ஹர்பஜன் சிங் கேள்வி..!

திங்கள், 12 ஜூன் 2023 (10:26 IST)
தோனி மட்டும் தனியாக விளையாடி உலகக் கோப்பையை வென்றாரா என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
தோனி என்ற இளம் வீரர் மட்டுமே தனியாக விளையாடி 2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வென்றாரா? என்ற கேள்வி எழுப்பிய ஹர்பஜன்சிங் அணியில் பிற பத்து வீரர்கள் விளையாடவில்லையா? அவர் மட்டுமே விளையாடி எல்லா உலக கோப்பையும் வென்றாரா? என்ற கேள்வியையும் எழுப்பினார். 
 
ஆஸ்திரேலியா அல்லது வேறு நாடுகள் உலக கோப்பையை வென்றால் அந்த நாடு வென்றது என்று தலைப்பு செய்தி ஆகிறது. ஆனால் இந்தியா வென்றால் மட்டுமே அதை தோனியின் வெற்றியாக பார்க்கிறார்கள். 
 
வெற்றியோ தோல்வியோ அது ஒட்டுமொத்த அணிக்கு சொந்தம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வெற்றி தோனியால் தான் சாத்தியமானது என்று பலர் ட்விட்டரில் பதிவு செய்து வருவதற்கு ஹர்பஜன் சிங் இந்த பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்