கடந்த ஆண்டு ரூபாய் மூன்று கோடிக்கு ராஜஸ்தான் அணி ராபின் உத்தப்பாவை ஏலம் எடுத்தது. இருப்பினும் அவர் தொடக்க ஆட்டக்காரர் உள்பட பல்வேறு நிலைகளில் விளையாடியும் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் ஒரு அரைசதமோ, சதமோ கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று இருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ராபின் உத்தப்பா தருமாறு சிஎஸ்கே கேட்டுக் கொண்டது . அதற்கேற்ப அவர் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளார்.