முன்னணி வீரர்கள் இல்லை, வாட்சன், தோனியின் உதவியும் இல்லை: சிஎஸ்கேவின் மாயாஜால வெற்றி

ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (07:42 IST)
முன்னணி வீரர்கள் இல்லை, வாட்சன், தோனியின் உதவியும் இல்லை
நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணி மாயாஜால வெற்றி பெற்றுள்ளது 
 
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, பிராவோ, ஹர்பஜன்சிங் ஆகியோர் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. அதேபோல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வாட்சன் பெவிலியன் திரும்பினார். தோனியும் கடைசி நேரத்தில் களம் இறங்கினாலும் ஒரே ஒரு மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், பிராவோ, வாட்சன், தோனி ஆகியோர்களின் உதவி இல்லாமலேயே நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மாயாஜால வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டம் முடியும் கடைசி நேரம் வரை தனது தனது அனுபவ பேட்டிங்கை அளித்த டூபிளஸ்சிஸால் சிஎஸ்கே அணிக்கு மிக எளிதில் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சாம் கர்ரன் சரியான நேரத்தில் களமிறக்கப்பட்டதால் 6 பந்துகளில் கிடைத்த 18 ரன்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்