ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்திய அணியாகும். அதேசமயம், மும்பை அணி பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் வென்றதே இல்லை என்ற சாதனையையும் வைத்துள்ளது. அந்தச் சாதனை நேற்றும் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர். கடைசி நேரத்தில் தீபக் சகார் மட்டுமே 28 ரன்கள் அடித்து அணியை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே தரப்பில், நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து, 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திரா அபாரமாக விளையாடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 53 ரன்கள் எடுத்தார்.
'தல' தோனி களத்தில் இறங்கினாலும், இரண்டு பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், 19.1 ஓவர்களில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.