இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20, 50 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற தந்த ஒரே கேப்டன் ஆவார்.
இந்நிலையில், 2019 உலகக்கோப்பை வரை தோனி தாக்கு பிடிப்பாரா என அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழ துவங்கியுள்ளது. தோனி, தனக்கு முழுதகுதி இருப்பதாகவும் 20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடிகளில் கடந்ததாக தெரிவித்திருந்தார்.
இதேபோல், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி தோனிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால், உலகக்கோப்பை விளையாடும் போது தோனிக்கு 38 வயதாகிவிடும் எனவே தோனி ஓய்வை அறிவித்துவிடுவார் என பலர் கூறிவருகின்றனர்.