காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி!

வெள்ளி, 29 ஜூலை 2022 (16:41 IST)
காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்த போட்டிகளில் ஒன்றான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது 
 
72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. நேற்றிரவு சிறப்பாக தொடக்க விழா நடைபெற்ற நிலையில் இன்று போட்டிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோதுகிறது. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்