பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி உறுதி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்

திங்கள், 22 நவம்பர் 2021 (19:23 IST)
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நடப்பது உறுதி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானில் இந்த தொடரை நடத்த பல எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது 
 
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதில் வசதியாக மற்றும் உறுதியாக உள்ளோம் என்றும் அனைத்து அணிகளும் அங்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் ஐசிசி தலைவர் பேட்டி அளித்துள்ளார்
 
கடந்த 2009ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு இதுவரை எந்த முன்னணி அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இல்லை என்ற நிலையில் 2025இல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்