ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர் இந்திய வீரர் பஜரங் புனியா.
இவர் தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்க மருந்து சோதனை மாதிரியே சமர்ப்பிக்க மறுத்ததால், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே இதே குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவரை இடைநீக்கம் செய்திருந்தது. இதனால் அவர் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க அல்லது வெளிநாட்டு பயிற்சிகளை பெற அனுமதிக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது மல்யுத்த போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.