விராட் கோலியை கழுவி ஊற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!!

வியாழன், 30 மார்ச் 2017 (12:10 IST)
விராட் கோலியை கடுமையாக தாக்கி ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுத ஆரம்பித்துள்ளன. 


 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முரட்டுத் தனத்தால் உலகமெங்கும் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
 
டிஆர்எஸ் அப்பீல் செய்யும் முன்பாக பெவிலியனை பார்த்து சக வீரர்களிடம் கருத்து கேட்டு ஆடிய ஸ்மித்துக்கு எதிராக சீறிய கோலியை, விமர்சனம் செய்தன ஆஸ்திரேலிய பத்திரிகைகள். 
 
இந்நிலையில், இனிமேல் ஆஸ்திரேலிய வீரர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என கோலி தெரிவித்தார். எனவே, கோலியை சிறு பிள்ளைத்தனமானவர் என்றும், கிளாஸ் வீரர் இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளன.
 
மேலும் டெய்லி டெலிகிராப் பத்திரிகை கோலியை ஈகோ பிடித்தவர் என வர்ணித்துள்ளது. மற்றொரு பத்தரிக்கை விளையாட்டின் ஸ்ப்ரிட் இந்திய அணிக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதற்கு முன்பு கோலியை அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்