ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

சனி, 10 செப்டம்பர் 2022 (10:23 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
ஆரோன் பின்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் 5401 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆரோன் பின்ச் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் டி20  போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்