ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு இதுதான்
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (22:10 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதுகிறது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகிறது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய வங்கதேச அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. 174 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை விக்கெட் இழப்பிறி 13.4 ஓவர்களீல் 61 ரன்கள் எடுத்துள்ளது.
அதேபோல் இன்னொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது. 258 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வரும் பாகிஸ்தான் அணி 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது