ஒரு நாள் போட்டிக்கான களத்தில் தவிக்கும் அஷ்வின்!!

செவ்வாய், 17 ஜனவரி 2017 (12:05 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடந்த ஒரு ஆண்டாக ஒருநாள் அரங்கில் விக்கெட் கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறார்.


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். டெஸ்ட் அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திரமாக உள்ளார்.
 
இதனால், சச்சின், டிராவிட் ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை அஷ்வின் வென்றார்.
 
ஆனால், அஷ்வின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2016ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்று 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.
 
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த இவர், 8 ஓவர்கள் வீசி 63 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்த தவறினார். 
 
சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காததும் இவரால் விக்கெட் கைப்பற்றமுடியாததும் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்