கில், புஜாரே சதம்.. 2வது இன்னிங்ஸிலும் கெத்து காட்டும் இந்திய அணி!

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:31 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி வருகிறது
 
புஜாரா மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் அடுத்தடுத்து செஞ்சுரி அடித்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து உள்ளது
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு 513 ரன்கள் என்ற இலக்கை வங்கதேச அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்