4 வது டி -20 போட்டி...நியூசிலாந்து வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு...

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (14:31 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டி தொடரில் முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது.
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டியில் வெல்லிங்டன் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் நியூஸிலாந்து கேப்டன் செளதி டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
 
மேலும் இன்றைய அணியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை செளதி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகியோர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சயினி ஆகியோர் உள்ளனர். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களும் விபரங்கள் பின்வருமாறு.
 
இந்தியா: சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சாஹல், நவ்தீப் சயினி, பும்ரா
 
நியூசிலாந்து: குப்தில், முன்ரோ, டாம் புரூஸ், டெய்லர், மிட்செல், டிம் செய்பிரிட், சாண்ட்னர், ஸ்காட், செளதி, இஷ் ஷோதி, பென்னட்
 
இதில், முதலில் பேட்டி செய்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு 166 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெருமா ? இல்லை இந்தியா தொடர் வெற்றியை தக்க வைக்குமா அஎன ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்னர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்