முத்தரப்பு போட்டியில் பங்கேற்க பாக். மறுப்பு!

திங்கள், 14 ஜனவரி 2008 (18:05 IST)
இந்தியா, பெல்ஜியம் நாடுகளுடனான முத்தரப்பு ஹாக்கி போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியா, பெல்ஜியம், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டிகள் வரும் 22 ஆம் தேதியில் இருந்து சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. இதனால் இந்தியா, பெல்ஜியம் நாடுகள் மட்டும் ஐந்து டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன.

வரும் 25, 27, 28, 30, 31 ஆகிய நாட்களில் போட்டி நடக்கும் என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இப்போட்டிகள் பீஜிங்கில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான பயிற்சியாக அமையும் என்று நம்பப்படுகிறது. ஒலிம்பிக் தகுதி போட்டிகள் சிலி நாட்டில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

"இந்திய ஹாக்கி அணி எப்போதும் குறிக்கோளை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவதே தற்போதைய உடனடி குறிக்கோள். மேலும் ஆசிய கோப்பையை பெறும் வரை அணி வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்" என்று இந்திய அணிக்கான முதன்மை பயிற்சியாளர் ஜோக்கியும் கார்வல்கோ கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்