நீச்சல் போட்டிகளில் அசத்திய 12 வயது தமிழகச் சிறுமி

வெள்ளி, 18 பிப்ரவரி 2011 (17:24 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ஜெயவீணா என்ற 12 வயதுச் சிறுமி ராஞ்சியில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் வெள்ளி வென்று பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார்.

சென்னையைச் சேர்ந்த ஜெயவீணா முதலில் பலரின் கவனத்தை ஈர்க்கவில்லை ஆனால் 50மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் முன்னணி வீராங்கனை ரிச்சா மிஸ்ராவை 5ஆம் இடத்துக்குப் பிந்தள்ளி பிறகு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

சுமார் நான்கரை அடி உயரம் மட்டுமே உள்ள ஜெயவீணா தனது ஆதர்சமாகக் கருதிய ரிச்சாவையே பின்னுக்குத் தள்ளியது அங்கு கூடியிருந்த நீச்சல் பண்டிதர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

உண்மையில் சொல்லப்போனால் ரிச்சாவிடம் கையெழுத்து வாங்க வந்த விசிறிகளை ரிச்சா, ஜெயவீணாவை நோக்கித் திருப்பி விட்டார். மேலும் ஜெயவீணாதான் அடுத்த நட்சத்திரம் என்று கூறி புகழாரம் சூட்டினார்.

இவர் மேலும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்