உசைன் போல்ட் 3க்கு3: 4x100 மீ ரிலேயிலும் தஙக்ம் வென்று சாதனை

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2012 (11:51 IST)
FILE
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் 100மீ, 200மீ ஓட்டத்தில் தங்கம் வென்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டையும் வென்று ஒலிம்பிக் சாதனை படைத்த உசைன் போல்ட் ஜமைக்காவின் 4x100 ஓட்டத்திலும் தங்கம் வென்று கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

36.84 வினாடிகளில் 4x100 மீ. இலக்கை எட்டி தங்கம் வென்றது ஜமைக்கா, இதற்கு முக்கிய காரணம் கடைசியாக ஓடி அமெரிக்க வீரர் பெய்லியை பின்னுக்குத் தள்ளியவர் உசைன் போல்ட்.

அமெரிக்கா அணி 37.04 வினாடிகளில் இலக்கை எட்டியது. இது போல்ட் அணியின் முந்தைய சாதனையாகும், ஆனாலும் அமெரிக்க வீரர் பெய்லி வெள்ளி வென்றார்.

3வது இடத்தில் கனடா தகுதியிழப்பு செய்யப்பட்டதால், டிரினிடாட் டுபாகோவுக்கு வெண்கலம் கிடைத்தது.

கடைசியாக ஜமைக்காஅ வீரரிடம் பேட்டனை வாங்கியபோது போல்ட்டும் பெய்லியும் சமமாகவே இருந்தனர். ஆனால் போல்ட்டின் கடைசி நேர வேகத் தாவலினால் தங்கத்தை வென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்