அரையிறுதிக்கு முன்னேறுவார்களா சாய்னா, காஷ்யப்? இன்று மோதல்

வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (13:19 IST)
FILE
ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதி சுற்றில் இன்று இந்திய வீரர்களான சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் இன்று பலப்பரிட்சையில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான சாய்னா நேவால் பதக்கம் பெற்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்னா நேவால் குரூப் பிரிவில் முதல் இரண்டு ஆட்டத்தில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா நேவால் நெதர்லாந்தை சேர்ந்த ஜூயோவுடன் மோதினார். இதன் முதல் செட்டை சாய்னா நேவால் 21௧4 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.

2-வது செட்டில் ஜியோ சற்று சவாலாக இருந்தார். என்றாலும் சாய்னா தனது துடிப்பான ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்த விடவில்லை. 2-வது செட்டையும் அவர் 21- 16 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு நுழைந்தார். ஸ்கோர் 21- 14, 21- 16. இந்த வெற்றியை பெற அவருக்கு 38 நிமிடங்களே தேவைப்பட்டது.

சாய்னா நேவால் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை சேர்ந்த டின் பவுனை சந்திக்கிறார்.

இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர் காஷ்யாப் கால் இறுதிக்கு முன்னேறினார். நேற்று நடந்த ஆட்டத்தில் அவர் இலங்கையை சேர்ந்த கருணா ரத்னேவை 21- 14, 15- 21, 21- 9 என்ற கணக்கில் வென்றார்.

இன்று நடைபெறும் கால்இறுதியில் காஷ்யாப் மலேசியாவை சேர்ந்த சாங் லீயை சந்திக்கிறார். இதில் காஷ்யாப் வெற்றி பெறுவது என்பது மிகமிக கடுமையானது. ஏனென்றால் தர வரிசையில் சாங் லீ முதல் இடத்தில் உள்ளார். இந்த கால் இறுதி போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்