கவாஸ்கருக்கு நெருக்கடி தரும் ஐ.சி.சி.யின் அராஜகம்!

புதன், 26 மார்ச் 2008 (15:44 IST)
படிக்கச் செல்வதற்கு முன்:

webdunia photoWD
கவாஸ்கர் ஐ.சி.சி பதவியிலிருந்து விலக கேட்டுக்கொள்ளப்படுவார் என்ற செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நிரஞ்சன் ஷாவும் பொருளாளர் ஸ்ரீனிவாசனும் மறுத்துள்ளனர். அதாவது ஐ.சி.சி.யிடமிருந்து தங்களுக்கு இது போன்ற தகவல்கள் எதுவும் இல்லை என்றும் இந்த செய்திகள் தவறானவை என்றும் ஐ.ி.ி. செய்யாஒன்றகுறித்ததாங்களகருத்தகூமுடியாதஎன்றும் இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த மறுப்பு பற்றி சந்தேகங்கள் எழுகின்றன. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் இன்று வர்ணனையாளர் கிறிஸ்டோஃபர் மார்டின் ஜென்கின்ஸ் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி. உயர்மட்ட செயற் குழு கூட்டத்தில் கவாஸ்கரை பதவி விலகக் கோருவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் தனது வாக்கை அளித்திருக்க வேண்டும். கவாஸ்கர் குறித்த முடிவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததோ இல்லையோ அது வேறு, அதுபோன்ற விவாதமே நிகழவில்லை என்கிற ரீதியில் நிரஞ்சன் ஷாவும் ஸ்ரீனிவாசனும் கூறியிருப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை. இதனால் கவாஸ்கர் பற்றிய முடிவை ஐ.சி.சி. எடுத்துள்ளது என்ற முடிவுக்கு நாம் வருவதை தவிர்க்க முடியாது.

எங்களுக்கு கிடைத்த உறுதியான செய்தியை அடிப்படையாக்க் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

-------------------------------------------------

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து வரும் சுனில் கவாஸ்கர் ஐ.சி.சி-யின் ஒரு தலைபட்சமான செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார், தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார். இதனால் எரிச்சலடைந்துள்ள ஐ.சி.சி. உயர்மட்டக் குழு, தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீடிடம் இந்த கவாஸ்கரை ஏதாவது செய்யவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளது.

உடனே ஐ.சி.சி., ஒன்று கவாஸ்கர் ஐ.சி.சி. பொறுப்பில் இருக்கவேண்டும், அல்லது வர்ணனையாளராக, பத்தி எழுத்தாளராக இருக்கவேண்டும், இரண்டு பொறுப்புகளிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்று நெருக்கடி கொடுத்துள்ளது. இதனால் அடுத்த வாரம் மால்கம் ஸ்பீடை சுனில் கவாஸ்கர் துபாயில் சந்திக்கும்போது தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸ்கர் அப்படி என்ன தவறு செய்தார்?

இந்திய - ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கிடையே நடந்து முடிந்த தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் மீது நிறவெறிப் புகார் எழுப்பப்பட்டபோது, அதனை விசாரித்த ஆட்ட நடுவர் மைக் புரோக்டர், ஆஸ்ட்ரேலிய வீரர்கள் தரப்பு வாதத்தை மட்டுமே காது கொடுத்துக் கேட்டது, இந்திய தரப்பு வாதங்களை ஒப்புக்கு கூட கேட்கவில்லை. அதுவும் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு மரியாதைக்குறிய ஆட்டக்காரர் கூறியதைக் கூட புரோக்டர் காது கொடுத்து கேட்கவில்லை.

webdunia photoWD
இது கவாஸ்கரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. "வெள்ளை ஆட்ட நடுவர் ஒருவர் வெள்ளை வீரர்கள் கூறுவதை மட்டும் எடுத்துக் கொள்கிறார் என்று தனக்கு தினமும் மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. எந்த ஒரு தொழில் நுட்பமும் நிரூபிக்க முடியாததை குற்றம் என்று எப்படி தீர்ப்பளிக்க முடியும்? அதுவும் கிரிக்கெட் ஆட்ட வரலாற்றின் ஒரு மிகப்பெரிய வீரர் சச்சின் டெண்டுல்கரின் வார்த்தை கேட்கப்படவில்லை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆவேசத்தை கிளப்பியுள்ளது" என்று கவாஸ்கர் மிகவும் நிதானமாக கூறினார். அவர் எங்கு இதில் மைக் ப்ரோக்டரை நிறவெறியாளர் என்று கூறியிருக்கிறார்?


ஒருவரை நிறவெறிபிடித்தவர் என்று கூறுவதற்கு கவாஸ்கர் ஒரு போதும் அஞ்சியது கிடையாது. ஏனெனில் தென் ஆப்பிரிக்க முன்னாள் துவக்க வீரரும் தற்போது இவருடன் சமமாக அமர்ந்து கிரிக்கெட் அலசலில் ஈடுபடும் பேரி ரிச்சர்ட்ஸை ஒரு நிறவெறியாளர் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியவர். இதனை பேரி ரிச்சர்ட்சே தெரிவித்துள்ளார்.

கவாஸ்கர் எப்போதும் கிரிக்கெட்டில் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வருபவர்தான். இங்கிலாந்து - ஆஸ்ட்ரேலியா குறித்து அவர் இதற்கு முன்னரும், தனது கிரிக்கெட் நூல்களிலும் கடுமையாகவே விமர்சனம் செய்தவர்தான். நிலைமை இப்படியிருக்க, விமர்சனத்தை எள்ளளவும் தாங்கமுடியாத வெள்ளை மேட்டிமை ஐ.சி.சி. அவரை முக்கிய பதவிக்கு நியமித்தது ஏன்?

webdunia photoWD
கிரிக்கெட் குழு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இரட்டைப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று விதி இருப்பதாக தற்போது கூறும் ஐ.சி.சி. கவாஸ்கருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போதே இந்த விதிமுறையை கடைபிடிக்க வலியுறுத்தியிருக்கலாமே?

ஏன் அப்போது செய்யாமல் இப்போது கவாஸ்கரை பதவி விலகுமாறு நெருக்கடி கொடுக்கிறது? ஏனென்றால், ஹர்பஜன் விவகாரம் குறித்து சமீபமாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில்: "இந்தியா ஒரு போதும் பழைய கூச்சமுள்ள குரல் அல்ல. தற்போது தன்னம்பிக்கை மிக்க குரலாக அது ஒலிக்கத் துவங்கியவுடன் ஆங்கில-ஆஸ்ட்ரேலிய டைனோசர்களுக்கு பொறுக்கவில்லை, ஹர்பஜன் விவகாரத்தை இந்தியா உறுதியாகக் கையாண்டு, தான் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்காமல் நீதி கிடைக்கச் செய்தது அவர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஆஸ்ட்ரேலிய வீரர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.

webdunia photoWD
தற்போது ஐ.சி.சி.யில் இந்திய ஆதிக்கம் குறித்து கவலை அடைபவர்கள், சில ஆண்டுகளுக்கு முன் ஐ.சி.சி.யின் இரண்டு முக்கிய பொறுப்புகளில் ஆஸ்ட்ரேலியர்கள் இருவர் இருந்ததை சௌகரியமாக மறந்து விடுகின்றனர். அவர்கள் மட்டும்தான் நேர்மையுடன் கிரிக்கெட்டின் நன்மையை மனதில் இருத்தி செயல்படுபவர்கள் என்றும் 'துணைக் கண்டத்தினருக்கு' அத்தகைய தன்மை இல்லை என்றும் தவறாக நினைத்து வந்தனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சர்வ வல்லமை பெற்றவர்கள் நாங்களே என்று இங்கிலாந்தும் ஆஸ்ட்ரேலியாவும் மார்தட்டி வந்த காலம் போயே போயிற்று, இந்த டைனோசர்கள் இன்னமும் இந்த நிஜத்தை தங்கள் கண்களைத் திறந்து பார்க்கவில்லை". என்று போட்டுத் தாக்கியுள்ளார் கவாஸ்கர்.

இதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கவாஸ்கர் கூறுவது சரியா தவறா என்பது வேறு விவகாரம், அவருக்கு அவர் மனதில் பட்டதை கூறும் கருத்துச் சுதந்திரம் உண்டு.

கவாஸ்கர், இயன் சாப்பல் போன்றவர்களால்தான் ஐ.சி.சி.க்கு பெருமையும் லாபமுமே தவிர, ஐ.சி.சி.பதவியால் இவர்களுக்கு எள்ளளவும் லாபமில்லை. நிலைமை இவ்வாறிருக்க, நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் ஜான் ரீட் கவாஸ்கர் தன்னை வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஐ.சி.சி.க்கும் கவாஸ்கருக்கும் உள்ள உறவு நிறுவனம்/ஊழியர் உறவு அல்ல. ஐ.சி.சி. அவ்வப்போது தவறான பாதையில் செல்லும்போது அதனை கண்டித்து முறைப்படுத்தும் விமர்சகர் உறவே கவாஸ்கர் - ஐ.சி.சி இடையே உள்ளது. இதைத்தான் கவாஸ்கர் செய்து வருகிறார்.

ஐ.சி.சி. பதவியை கவாஸ்கர் உதறித் தள்ளிவிட்டு, அதன் செயல்பாடுகளை முழு நேர விமர்சனத்துக்குட்படுத்த துவங்கவேண்டும்.

விமர்சனங்களை பொறுக்க முடியாத, விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு செயல்பட முடியாத ஆதிக்க மனோபாவம் கொண்ட வெள்ளையர்கள் பலரை நிர்வாக மட்டத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி. கவாஸ்கரிடம் காட்டுவது நிறவெறி மனோபாவமே?

இதெல்லாம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரியாமல் இல்லை.