தோனிக்கு பாசிடிவ் கேப்டன்சி என்றால் என்னவென்று தெரியுமா? அயல்நாட்டில் ஜிம்பாவேயிற்கு அடுத்து மோசமான ரெக்கார்ட்!

செவ்வாய், 18 பிப்ரவரி 2014 (11:54 IST)
அயல்நாடுகளில் தோனி உதை வாங்கத் தொடங்கியது முதல் அல்ல அதற்கு முன்பே டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி கேப்டன்சி செய்ய லாயக்கற்றவர் என்று கூறினோம். அதன் இன்னொரு அத்தியாயம்தான் நியூசீலாந்தில் நடந்து கொண்டிருக்கிறது.
FILE

14 டெஸ்ட்கள், 3 ஆண்டுகள் தோனி தலைமையில் இந்தியா அயல்நாட்டில் வெற்றி பெறவில்லை. இது ஜிம்பாவேயிற்கு அடுத்த மோசமான நிலையாகும்.

வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறவில்லை. வெற்றி வாய்ப்பு வந்தும் அதனை தோல்வி வாய்ப்புகளாக மாற்றிய பெருமை இந்தியாவின் சோ கால்டு 'சிறந்த கேப்டன்' மற்றும் எப்போதும் கூல் கேப்டன் தோனியினால் மட்டுமே முடியக்கூடிய 'சாதனை' என்றால் அது மிகையாகாது.

தோனியின் மோசமான கேப்டன்சி வரலாறு:

டொமினிகாவில் ஒரு 14 ஓவர்களில் எண்பத்தி சொச்சம் ரன்கள் தேவை அதை துரத்த மனமில்லாமல் அதாவது அந்த நிலையில் தோற்க வாய்ப்பேயில்லை, இருந்தாலும் துரத்த மனமில்லாமல் டிராவுக்கு ஆடிய உலக மகா கேப்டன் தோனி.
FILE

4- 0 உதையில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் இங்கிலாந்து 4ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது 72/5. ஜாகீர் கான் இல்லை சரி அதற்காக் உணவு இடைவேளை முடிந்து ரெய்னா, ஹர்பஜன் சிங்கை வைத்தா வீசுவது? இங்கிலாது 260/5 என்று மீண்டது. இத்தனைக்கும் இஷாந்த் சர்மா இரண்டு அபார பந்துகளில் பெல்,பீட்டர்சன் ஆகியோரை காலி செய்திருந்தார்.

அதே தொடரில் டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து 124/8 ஆனால் நமது சிறந்த கேப்டன் ஏதோ ரிச்சர்ட்ஸும், கில்கிறிஸ்டும் ஆடுவது போல் பிராட், பிரஸ்னன் ஆகியோருக்கு ஸ்லிப் இல்லாமல் எல்லாரையும் தள்ளி நிறுத்தி டீப் பாயிண்டில் வைத்து 'அபாரமான' உலக பிரசித்தி பெற்ற கள வியூகம் அமைத்து இங்கிலாந்தை தப்பிக்கவைத்தார்.

அதே டெஸ்ட் 2வது இன்னிங்சில் இயன் பெல் பந்து செத்து விட்டது என்று ஓடப்போக அது ரன் அவுட் செய்யப்பட்டது.ஆனல் தோல்வியிலும் பெர்ந்தன்மை காட்டும் நம் சிறந்த கேப்டன் தோனி பெல்லை ரீ-கால் செய்து மீண்டு ஆட வைத்து நாசமாகப் போனார்.

ஆஸ்ட்ரேலியாவில் மெல்பர்னில் ஒரேயொரு வாய்ப்புதான் வந்தது ஆஸ்ட்ரேலியா 214/6. பிராட் ஹேடின் களமிறங்கியுள்ளார். ஆம் பிராட் ஹேடின் பெரிய கேரி சோபர்ஸ் அவருக்கு லாங் ஆன், டீப் மிட்விக்கெட், டீப் ஃபைன் லெக் பீல்ட் செட் அப் செய்தார் உலக மகா கேப்டன் கூல். 2வது இன்னிங்ஸில் 27/4 ஆனால் மறுநாள் காலையில் ஸ்லிப் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களை வீசச் செய்தார் தோனி. ரன்களை கட்டுப்படுத்துகிறாராம். மோசமான பீல்ட் செட் அப். அப்போதே இயன் சாப்பல், வாசிம் அக்ரம், கங்கூலி என்று அனைவரும் தோனியின் கேலிக்கூத்தான டெஸ்ட் கேப்டன்சி பற்றி கடும் விமர்சனம் வைக்கத் தொடங்கினர்.
FILE

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முன் பேர தொடரில் ஜோகன்னஸ்பர்கில் 2வது இன்னிங்ஸில் மீண்டும் இதே பீல்டிங் செட் அப். பவுலர்களின் தீவிரத்தைக் குறைக்கும் கள வியூகம் கடைசியில் வெற்றி பெறவேண்டிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

2வது டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு கேப்டனும் செய்யகூடாத அபவாதம் செய்தார் தோனி, அதாவது புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்தில் 66 ஓவர்களை வீசி சாதனை புரிந்த ஒரே கேப்டன் இவராகத்தான் இருப்பார். ஆனால் என்ன செய்வது இந்தியாவின் சிறந்த கேப்டன் என்ற ஹைப் வேறு. முடிவு தோல்வி.

நியூசீலாந்தில் முதல் டெஸ்டில் 30/3 என்று இருந்த நியூசீலாந்தை 500க்கும் மேல் ரன்கள் எடுக்க அனுமதித்தது.

த்ற்போது வெலிங்டனில் 94/5 என்ற நிலையில் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்லிப் இல்லமல் லெக் திசையில் 6 பேர் ஆஃப் திசையில் 3பேர் என்று கள வியூகம் அமைத்த மகானுபாவன் தோனி. மதியம் வந்து ரவீந்தர் ஜடேஜாவை ஒரு முனையில் அதுவும் ஓவர் த ஸ்டம்பில் 24 ஓவர்கள் வீசச்செய்கிறார். ஏனெனில் ரன் கட்டுப்படுத்துகிறாராம்! ஆகா என்னே கேப்டன்சி!! மேலும் எப்போதும் லாங் ஆன், லாங் ஆஃப், மெக்கல்லம் பார்த்தார் இதைவிட என்னவேண்டும் சிங்கிள் எடுத்து எடுத்து செட்டில் ஆனார். ஆகவிட்டது தோனி.

திடீரென ஒரே ஸ்லிப்பை எங்காவது நிறுத்துவது அதனால் எந்த பயனும் இருக்காது அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் கேட்ச்கள் செல்லும். இதுதான் நடந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் காலையில் கூட நியூசீலாந்து 6 ரன்களுக்கு 5 விக்கெட் அதாவது 6 ரன்கள்தான் முன்னிலை பெற்றிருந்தது. மெக்கல்லம் முதல் பந்தை எட்ஜ் செய்கிறார். பந்து 19 ஓவர்கள்தான் ஆகிறது. அப்போதும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பே அதிகம், ஆனால் தோனியின் எதிர்மறை அணுகுமுறையினால் விக்கெட்டுகள் வீழ்த்தும் கள வியூகம், முயற்சிகள் முற்றிலும் இல்லவேயில்லை.

மேலும் இஷாந்தையும், மொகமட் ஷமியையும் அழைத்து ரவுண்ட் த விக்கெட்டில் வீச சொன்னார் தோனி அதுவும் ஆஃப் ஸைடில் 7 பேர். வேகப்பந்து வீச்சாளர் எப்படி வீச முடியும். ரோகித் சர்மா வீசும்போது, ஷிகர் தவான் வீசும்போது ஸ்லிப் உண்டு. ஆனால் இஷாந்த், ஷமிக்கு கிடையாது என்ன கேப்டனப்பா நம் கேப்டன்?

நாம் விளையாடும் 20 ஓவர் டென்னிஸ் பந்து போட்டிகளில்தன் யாராவது ஒருவர் மிட்விக்கெட்டில் அடித்தால் அங்கு உடனே ஒரு பீல்டரைப் போடுவோம், பிறகு அடிக்கும் இடங்களில் எல்லாம் பீல்ட்களைப் போடுவோம், ஆனால் நம் சிறந்த கேப்டன் எதிரணியினர் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தால் உடனே டீப் பாயிண்டில் ஆள் போடும் அதிசய கேப்டன்.

உண்மையில் கேப்டன்- பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் கூட்டணியாகும் இது. அவ்வளவு பெரிய கோச் ஆஸ்ட்ரேலியாவை என்ன சேதி என்று கேட்ட கோச் கூலிங்கிளாசை போட்டுக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார். தோனியின் கோணங்கித் தனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன சொல்வது? இதோ இன்னொரு தொடரை தோனி இழந்து விட்டார். அதற்கு அவரை மட்டுமே காரணம் கூறுவது தவறு என்று பலரும் கூறலாம் ஆனால் வெற்றி வாய்ப்புகளையெல்லாம் கோட்டைவிட்டு வெற்றியை எட்டாக்கனியாக தோனி ஆக்கி விடும் நாள் தூரத்தில் இல்லை. அதற்குள் அவரை தூக்குவது கிரிக்கெட்டிற்கு நல்லது என்றே படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்