விஜய் படங்களின் பட்டியல் முழுமையான விவரம்

ஜே.பி.ஆர்

வியாழன், 4 டிசம்பர் 2014 (08:43 IST)
விஜய் நடிக்க வந்து இன்றுடன் (04-12-14)  22 வருடங்கள் நிறைவடைகிறது. 22 வருடங்களுக்கு முன் இதே தேதியில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் என்ற நடிகர் அறிமுகமானார். இன்று அவர் எட்டியிருக்கும் சிகரம் சாதாரணமானதல்ல. அவர் கடந்து வந்த பாதையை அவர் நடித்த படங்களின் பட்டியல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1992 - நாளைய தீர்ப்பு
1993 - செந்ததூரப்பாண்டி
1994 - ரசிகன்
1995 - தேவா, ராஜாவின் பார்வையில், விஷ்ணு, சந்திரலேகா
1996  - கோயம்புத்ததூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக, வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா
1997 - காலெமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்குநேர், காதலுக்கு மரியாதை
1998 - நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலவே வா
1999 - துள்ளாத மனமும் துள்ளும், என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா
2000 - கண்ணுக்குள் நிலவு, குஷி, ப்ரியமானவளே
2001 - ப்ரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான்
2002 - தமிழன், யூத், பகவதி
2003 - வசீகரா, புதிய கீதை, திருமலை, 
2004 - உதயா, கில்லி, மதுர
2005 - திருப்பாச்சி, சுக்கிரன், சச்சின், சிவகாசி
2006 - ஆதி
2007 - போக்கிரி, அழகிய தமிழ்மகன்
2008 - குருவி
2009 - வில்லு, வேட்டைக்காரன்
2010 - சுறா
2011 - காவலன், வேலாயுதம்
2012 - நண்பன், துப்பாக்கி
2013 - தலைவா
2014 - ஜில்லா, கத்தி 
 
கத்தி விஜய்யின் 57 -வது படம். நாயகனாக அறிமுகமாகும்முன் அவர் குழந்தை நட்சத்திரமாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பல படங்களில் நடித்துள்ளார். 1984 -ல் வெற்றி, குடும்பம் படத்திலும், 1985 -ல் நான் சிகப்பு மனிதன் படத்திலும், 1986 -இல் வசந்தராகம் படத்திலும், 1987 -ல் சட்டம் ஒரு இருட்டறையிலும், 1988 -ல் இது எங்க நீதி படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
 
அவரது 58 -வது படத்தை சிம்புதேவன் தற்போது இயக்கி வருகிறார். அதையடுத்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அது அவரது 59 -வது படம். அவரது 60 -வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார்.
 
22 வருடங்களில் 57 படங்களின் மூலம் விஜய் பெற்றிருக்கும் மக்கள் செல்வாக்கு அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்