மாமி நடிகையின் முன்னாள் வுட்பி மாதவி நடிகையுடன் திரிவதைதான் கோடம்பாக்கம் இன்னமும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறது.
திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு மாமி தனது வுட்பியை கழற்றிவிட்டார். காதலியாக இருந்த போது சுதந்திரம் தந்த வுட்பி, நிச்சயதார்த்தம் முடிந்ததும், நான்தான் எல்லாம் என்று பேச, செயல்பட ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக, மாமி இனி நடிக்கக் கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்ததற்கே இப்படியென்றால், திருமணம் முடிந்தால் கழுத்தில் கயிறைகட்டி வீட்டில் கட்டிவிடுவார்கள் என்று பயந்துதான் மாமி நிச்சயத்தார்த்தத்தோடு வுட்பிக்கு டாட்டா காட்டினார்.
மாமி இல்லை என்றால் இன்னொரு சிவகாமி என்றுதான் முன்னாள் வுட்பியும் மாதவி நடிகையை தன்னுடன் கூட்டணி சேர்த்திருக்கிறார். இது வெறும் பிக்னிக் கூட்டணியா இல்லை வாழ்க்கை முழுவதும் தொடரப் போகும் திருமண பந்தமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இதுவும் ஒரு கல்தா கதைதான். ஆனால் வேற மாதிரி.
கொஞ்சநாள் முன்பு சின்ன திலகத்தின் குடும்ப நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க சேனாதிபதி ஒப்புக் கொண்டார். ஒல்லி நடிகரின் அண்ணன், காதல் கொண்டேன்தான் இயக்குனர். என்ன நினைத்தாரோ, இந்த புராஜெக்டிலிருந்து சேனாதிபதி திடீரென்று விலகினார். இந்த திடீர் முடிவால் சின்ன திலகமும், வசீகரா இசையமைப்பாளரும் உர்ரென்று இருக்கிறார்கள்.
சேனாதிபதி நடிக்கிறார் என்றதும் முக்கால் கோடியை வசீகராவுக்கு அட்வான்சாக தந்திருக்கிறார் சின்ன திலகம். இப்போது சேனாதிபதி படம் நடிக்கவில்லை என்றதும், தனது மகன் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க கேட்டிருக்கிறார் சின்ன திலகம்.
சேனாதிபதி படம் என்றுதானே கால்ஷீட் தந்தேன், இப்போ உங்க மகன் படத்துக்கு இசையமைக்க வேண்டுமா என்று கதை சொல்லவரும் இயக்குனர்களையெல்லாம் தொங்கலில் விடுகிறாராம் வசீகரா இசையமைப்பாளர்.
புட்டத்தில் அடித்து பல்லை பறித்த கதையாயில்ல இருக்கு...