கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

புதன், 18 ஜனவரி 2017 (15:15 IST)
சொல்ல வேண்டியதில்லை... பைரவாதான் எங்கும் எதிலும் அடித்து கிளப்பிக் கொண்டிருக்கிறது. சென்ற வார சென்னை பாக்ஸ்  ஆபிஸில் அமீர்கானின் தங்கல் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்றவார இறுதியில் 2.44 லட்சங்களை இந்தப் படம் வசூலித்துள்ளது.

 
கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 4.45 கோடிகள். கமலின் தூங்கா வனம், தனுஷின் மாரி, தங்கமகன், சிம்புவின்  வாலு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலைவிட இது அதிகம்.
 
சென்றவாரம் வெளியான பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக பாக்ஸ் ஆபிஸில் பரிதாபமாக விழிக்கிறது. 14 -ஆம் தேதி  வெளியான இந்தப் படம், முதலிரண்டு தினங்களில் 5.60 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
 
சென்ற வாரம் வெளியான பாலகிருஷ்ணாவின் தெலுங்குப் படம், Gautamiputra satakarni சக்கைப்போடு போடுகிறது.  முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் இந்தப் படம், 12.60 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது. சென்னையை கலக்கும்  இன்னொரு தெலுங்குப் படம், சிரஞ்சீவியின் கைதி நெம்பர் 150.
 
11 ஆம் தேதி வெளியான இந்தப் படம், 13,14,15 தேதிகளில் 10.90 லட்சங்களை வசூலித்துள்ளது. 11, 12 தேதிகளையும் சேர்த்தால்  இதன் வசூல், 37.25 லட்சங்கள்.
 
வின் டீசல், தீபிகா படுகோன் நடித்த ஹாலிவுட் படம், ட்ரிபிள் எக்ஸ் - தி ரிட்டர்ன் ஆஃப் ஸன்டர் கோஜ் திரைப்படம் சென்ற  வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 18 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
இந்தப் படங்கள் இவ்வளவு குறைவாக வசூலிக்க காரணம், விஜய்யின் பைரவா. மொத்த திரையரங்குகளிலும் இந்தப் படம்தான்  ஓடுகிறது. பிறகெப்படி மற்ற படங்கள் வசூலிக்க?
 
12 -ஆம் தேதி வெளியான பைரவா 13,14,15 தேதிகளில் சென்னையில் 2.20 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. அட்டகாசமான  வசூல். 12 -ஆம் தேதியையும் சேர்த்தால், முதல் நான்கு தினங்களில் 3.09 கோடிகள். விஜய் படங்களில் இதுதான் அதிகபட்ச  சென்னை பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்.
 
தவிர, கபாலி, ஐ படங்களுக்கு அடுத்து பைரவாதான் அதிகபட்ச சென்னை ஓபனிங் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்