தமிழ் ராக்கர்ஸுக்கு பூட்டு
செய்யிறது திருட்டு வேலை. இதில் தெனவெட்டாக சவால்விட்டால் என்னாகும்? தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தைதான் சொல்கிறோம். இன்றைய தேதியில் சூர்யாவா, தமிழ் ராக்கர்சா என்று போட்டி வைத்தால் பன்னீர் மாதிரி பல மடங்கு ஆதரவுடன் தமிழ் ராக்கர்ஸ் வெற்றி பெறும். அவ்வளவு பேர் அதில் படம் பார்க்கிறார்கள். சி 3 படத்தை வெளியான அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று அவர்களும், செய்துபாரு, உனக்கு ஜெயில்தான் என்று ஞானவேல்ராஜாவும் பரஸ்பரம் தொடை தட்டினர். முதல் ரவுண்டில் தமிழ் ராக்கர்ஸ் வெற்றி பெற்றது போல் தெரிந்தாலும், அதன் இணையதளத்தை முடக்கி சி 3 அணி வெற்றியை தட்டிப் பறித்திருக்கிறது.