சினி பாப்கார்ன் - சிக்கிட்டான்... சேர்த்து குத்துங்க...

வெள்ளி, 18 டிசம்பர் 2015 (16:07 IST)
கமலை காணவில்லை
 
மழை வெள்ளம் வடிந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் இன்னும் பசுமையாகத்தான் உள்ளன. வீரமாக பேட்டி தந்துவிட்டு, விஸ்வரூப நினைவு வந்ததும் பம்மினார் கமல். ஆனாலும், விடாமல் துரத்தியடிக்கத்தான் செய்தார்கள் சிலர். தாம்பரத்தில் கமலை காணவில்லை என்று போஸ்டரே அடித்து பரபரப்பை கிளப்பினார்கள்.


 
 
இவ்வளவு மழை வெள்ளத்துக்குப் பிறகும் வெளியே வராமல் வாட்ஸ் அப், போனில் வாய்ஸ் தரும் நபர்களைக் குறித்து கேள்வி எழுப்பாமல் ஒரு நடிகனை காணவில்லை என்று போஸ்டரடிக்கிறார்கள்.
 
நம்பிக்கையேயில்லை, இந்த நாடு திருந்தும்னு.

மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

இதெல்லாமா இறைவன் கொடுத்த வரம்?
 
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் சென்னையில் பாராட்டுவிழா நடந்தது. விழாவில் பேசிய இளையராஜா, இயற்கையை கட்டுப்படுத்துவது இறைவன், மனிதனுக்குள்ளிருக்கும் நேயத்தை வெளிக்கொணர இந்த மழையை பெய்யச் செய்ததே இறைவன்தான் என்றார் ஒரே போடாக.


 
 
கூவத்தின் நாற்றத்தில் இருப்பவனிடம் மனித நேயம் தோன்றி என்ன ஆகப் போகிறது இசைஞானி ஐயா? உண்மையிலேயே மனித நேயம் சுரக்க வேண்டிய பெரும் கொள்ளைக்காரர்களும், கார்ப்பரேட் முதலாளிகளும், சுரண்டல் அரசியல்வாதிகளும் இந்த மழையிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாகத்தானே இருக்கிறார்கள்.
 
பக்தியும், ஞானமும் முத்திப் போச்சுன்னா தப்பு தப்பா பேசத் தோணுமோ?
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

சிக்கிட்டான்... சேர்ந்து குத்துங்க...
 
தமிழ் சினிமா பாடல்கள் என்றாலே இரட்டை அர்த்த வசனம்தான் முன் நிற்கும். மாந்தோப்பில் நான் நின்றிருந்தேன் என்ற எம்.ஜி.ஆர். பாடலாகட்டும், சமைஞ்சது எப்படி என்ற வாலி பாடலாகட்டும், கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா சினேகன் சிந்தனை வரிகளாகட்டும்... எல்லாமே 'ஏ' கிளாஸ் வரிகள்தான். அப்பட்டமான உடலுறவை இலைமறைக்காயாக சொல்வதுதான் திரைப்பட பாடல் என்றாகிவிட்டது. விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு.


 
 
இப்போது கொஞ்சம் பரவாயில்லை. எண்பது தொண்ணூறுகளில் எல்லாமே ஆபாச குப்பை. பூ மழை பொழிகிறது படத்தில் இடம்பெறும் நதியா நதியா நைல் நதியா பாடலை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். அப்பட்டமான உடலுறவு பாடல்.
 
இந்தப் பாடல்களை எழுதியவர்கள் ஒன்றிணைந்து சிம்பு - அனிருத்தின் பீப் பாடலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் என்னவோ புனிதப் பாடலை மட்டும் எழுதியதாக நினைப்பு.
 
ஒருத்தன் சிக்கிட்டா ஊர் சேர்ந்து அடிக்கிறது உலக வழக்கம்தானே.

வெப்துனியாவைப் படிக்கவும்