தேயும் தமிழ் சினிமா, எந்திரனை மிஞ்சிய தெலுங்கு சினிமா

திங்கள், 21 ஜனவரி 2013 (11:54 IST)
தமிழ் சினிமாவையும், தெலுங்கு சினிமாவையும் கம்பேர் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது. இந்த இரு இன்டஸ்ட்‌ரிகளும்தான் இந்தியாவின் ஒட்டு மொத்த படத்தயா‌ரிப்பில் மூன்றில் இரண்டு பங்கை கவர் செய்கின்றன.

இந்த இரு மொழிகளிலும் தயாரான படங்களின் எண்ணிக்கை முந்நூறை தாண்டுகிறது. அந்த விஷயத்தில் இரண்டு இன்டஸ்ட்‌ரிகளும் ஒரேவிதமான ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. லாப விகிதத்தில்தான் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

சென்ற வருடம் நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, துப்பாக்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கும்கி, சுந்தரபாண்டியன் என பத்துக்குள் அடங்கிவிடுகிற படங்கள்தான் லாபம் சம்பாதித்தன. இதில் துப்பாக்கியும், ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டுமே பிளாக் பஸ்டர். சூப்பர்ஹிட்டில் கலகலப்பை சேர்க்கலாம். மற்றவற்றை கொஞ்சம் தாராளத்துடன் ஹிட்டில் சேர்க்கலாம்.
FILE

மெ‌ரினா, கழுகு, மனம் கொத்திப் பறவை, வழக்கு எண் எல்லாம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்ததாக கூற முடியாது. இவ்வளவுதான் 2012 வருடத்தைப் பற்றி பாஸிடிவாக சொல்ல நம்மிடம் இருப்பவை.
FILE

தெலுங்கை எடுத்துக் கொண்டால் ஜனவ‌ரி மாதமே பிசினஸ்மேன் வெளியாகி ‌ரிக்கார்ட்களை நொறுக்கிறது. வாராவாரம் வெள்ளிக்கிழமை முந்தைய படத்தின் ‌ரிக்கார்ட்கள் முறியடிக்கப்பட்டன. சென்ற வருடம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் படங்கள் மட்டும் பத்து தேறும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்ற வருடத்தின் மெகா படம் என்றால் கப்பார் சிங்தான். பவன் கல்யாணின் இந்தப் படம் 28 கோடியில் தயராகி ஏறக்குறைய 120 கோடியை அள்ளியது. 306 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. யுஎஸ் ஸில் சென்ற வருடத்தின் அதிக வசூல் செய்த தெலுங்குப் படம் இதுதான்.
FILE

தமிழில் நான் ஈ என்ற பெய‌ரில் வெளியான ஈகா பற்றி குறிப்பிடவே வேண்டாம். இந்தியா முழுக்க வசூல் மழை. யுஎஸ் ஸில் ஒரு மில்லியன் டாலர்களை இப்படம் கடந்து சாதனை படைத்தது. ராம் சரண் தேஜாவின் ரட்சா ஆந்திராவில் மட்டும் 48 கோடிகளை வசூல் செய்தது. 28 கோடியில் தயாரான இதன் திரையரங்கு வசூல் மட்டும் 63 கோடிகளை தொடுகிறது.

ஜுலாயி தனது பங்காக 55 கோடிகளை திரையரங்குகளில் மட்டும் வசூலித்தது. வருட இறுதியில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்று கூறப்பட்ட ராணா, நயன்தாராவின் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படத்தின் வசூலே 47 கோடிகள். தமருகம், சுடிகாடு, லவ் பெயிலிவர், இஸ்க், கேமராமேன் கங்கா தோ ராம்பாபு.... ஹிட் படங்களின் லிஸ்ட் போய்க் கொண்டேயிருக்கிறது.

தமிழ் சினிமா தோல்வியில் துவண்டு கொண்டிருந்த போது ஆந்திராவில் அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். 2013ம் இந்த சோகக் கதை தொடரும் போலத்தான் தெ‌ரிகிறது. ஜனவ‌ரி மாதம் வெளியான படங்களில் சமர் சுமார் லிஸ்டிலும், கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹிட் லிஸ்டிலும் சேர்ந்து கொள்ள அலெக்ஸ் பாண்டியனின் பயணம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம் தெலுங்கில் வெற்றியின் கணக்கை ஆர்ப்பாட்டமாக தொடங்கியிருக்கிறார்கள்.

ஜனவ‌ரி 9 ஆம் தேதி வெளியான ராம் சரண் தேஜாவின் நாயக் அபாரமான ஓபனிங்கை பெற்றிருக்கிறது. முதல் வாரத்தில் இதன் இந்திய திரையரங்கு வசூல் மட்டும் 30.49 கோடிகள். யுஎஸ் ஸிலும் படம் பட்டையை கிளப்புகிறது. செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிறுவரை ஆறு தினங்களில் 54 திரையிடல்களில் 2.11 கோடியை வசூலித்துள்ளது. யுஎஸ் ஸில் துப்பாக்கியின் மொத்த வசூலைவிட இது அதிகம்.

ஆஹா... நாயக் பட்டைய கிளப்புது என்று சொல்லி இரண்டு நாட்கள் முடிவதற்குள் ஜனவ‌ரி 11 வெங்கடேஷ் மகேஷ்பாபு நடித்த சீதாம்மா வகிட்லோ சி‌ரிமலே செட்டு ‌ரிலீஸ். மொத்தம் நான்கே நாட்கள்... யுஎஸ் ஸில் இப்படம் வா‌ரிக்குவித்தது 6.87 கோடிகள். இதுவரை தென்னிந்திய சினிமா வைத்திருந்த ‌ரிக்கார்ட்கள் எல்லாம் காலி, ஊதித்தள்ளிவிட்டது இந்தப் படம். எந்திரன் யுஎஸ் ஸில் வசூலித்ததை நான்கே தினங்களில் இப்படம் கடந்திருக்கிறது. தெலுங்கு சினிமா இப்படியென்றால் அலெக்ஸ் பாண்டியன் முதல் வாரத்தில் ஒன்பது லட்சங்களுடனும், கண்ணா லட்டு தின்ன ஆசையா 12 லட்சங்களுடன் நுரை தள்ளுகிறது.
FILE

தமிழ், தெலுங்கில் படத்தை வெளியிடும் பேராசையில் அலெக்ஸ் பாண்டியன் போன்ற குப்பைகளை எடுத்து தள்ளுவதுதான் தமிழ்ப் படங்களின் தோல்விக்கான முக்கிய காரணம். அதேபோல் திரையரங்கு கட்டணம். ஹைதராபாத்தின் காஸ்ட் ஆஃப் லிவிங் சென்னையைவிட அதிகம் என்றாலும் 40 ரூபாயில் ஏசி யுடன் தனித்திரையரங்கில் ஒரு படத்தை பார்த்துவிடலாம். அனைத்து வசதிகளும் நிறைந்த மல்டிபிளக்ஸில் 80 ரூபாயில் படம் பார்க்கலாம். ஆனால் இங்கு 120 ரூபாய் டிக்கெட்டுடன் கோக்கும், பாப்கானும் வாங்கியே ஆக வேண்டும் என 200 ரூபாயை கொள்ளையடித்துவிடுகிறார்கள். தனித் திரையரங்குகளில் அவர்கள் வைத்ததே சட்டம். சென்னை கோயம்பேடிலுள்ள ரோகினி வளாகத்தில் ஒரு டிக்கெட்டின் விலை என்ன என்று யாருக்கும் தpயாது. விலை பி‌ரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டை அவர்கள் இதுவரை விநியோகித்ததே இல்லை. கவுண்ட‌ரில் இருப்பவர் சொல்வதுதான் டிக்கெட் விலை. இதுதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளின் நிலவரம் எனும் போது யார் திரையரங்குக்கு வருவது?

இன்னொன்று நடிகர்களின் சம்பளம். நேற்று முளைத்த நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள். மாஸ் இமே‌ஜ் வந்ததென்றால் தெலுங்கு ரைட்ஸையும் சேர்த்து சம்பளத்தை பதினைந்து கோடிக்கு மேல் உயர்த்திவிடுகிறார்கள். இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று வாயையும் வாலையும் ஒவ்வொரு பக்கம் வைத்தால் அலெக்ஸ் பாண்டியனைப் போல் ஆஃப் பாயில் படங்களைதான் எடுக்க முடியும். இவர்கள் தெலுங்கு ஹீரோக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு படம் தொடங்கும் போது அட்வான்hக சம்பளத்தில் சிறு பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். நாகார்ஜுன் போன்ற மாஸ் நடிகர்களே ஒரு லட்சம் சம்பளத்தை அட்வான்சாக பெற்றுக் கொண்டு எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார்கள். மீதி சம்பளம் படம் முடிந்த பிறகு. இதனால் தயா‌ரிப்பாளர் பைனான்ஸியருக்கு வட்டி கட்டி அழ வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படாது. இன்று வசூலில் அடித்து தhள் கிளப்பிக் கொண்டிருக்கும் சீதாம்மா வகிட்லோ சி‌ரிமலே செட்டு படத்தில் நடிப்பதற்கு தனது வழக்கமான சம்பளத்தில் பாதியையே வாங்கிக் கொண்டார் மகேஷ்பாபு. பாதி சம்பளம் போதும் என்று தpவித்துவிட்டே படத்தில் நடிக்க தனது சம்மதத்தை தpவித்தார்.

தமிழனைப் போல் யாருண்டு... தமிழில்தான் வித்தியாசமான முயற்சிகள் வருகிறது என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் சுயத்தம்பட்டத்தை விட்டொழித்து மாஸ் இமே‌ஜ் கிறக்கத்தை நடிகர்களும், அவர்களின் இமேஜுக்கு வால் பிடிக்கும் கதைகளை இயக்குனர்களும் தவிர்த்து வியாபாரத்தை பெருக்கும் வழியை தயா‌ரிப்பாளர்கள் கைக்கொண்டால் மட்டுமே தமிழ் சினிமா பிழைக்கும். இல்லையென்றால் ஆந்திராக்காரன் பி‌ரியாணி சாப்பிட நாம் ஆவக்காய் ஊறுகாயுடன் திருப்திப்பட வேண்டியதுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்